High Commission of India

Colombo

***

7th International Day of Yoga – Press Release

The High Commission of India and the Swami Vivekananda Cultural Centre, Colombo joined hands with the Sri Lankan Armed Forces to celebrate the 7th ‘International Yoga Day’ today (21 June) at a special Yoga session, organized in the virtual mode. The Secretary of Defence of Sri Lanka, General (Retd) Kamal Gunaratne was the Chief Guest at event, which was also attended by the Chief of Defence Staff & Commander of Army, General Shavendra Silva and around 500 defence personnel from about 150 defence establishments across Sri Lanka, including the Kotelawala Defence University, Training schools, defence academies, ships etc.

2.​Commencing the event, the Chief Priest and Director of the Param Dhamma Chetiya Pirivena in Ratmalana Most Venerable Dr Maitape Wimalasera Thero, invoked the blessings of the Buddha for overall wellbeing of everyone. The messages of Prime Minister of India, Narendra Modi and Hon’ble President of Sri Lanka, H.E Gotabaya Rajapaksa, inspiring everyone to follow the tradition of Yoga due to its numerous benefits, were shared with the participants. In his message, Prime Minister Modi highlighted the relevance of this year’s theme of Yoga Day, ‘Yoga for Wellness’ in the current Covid-19 situation. He underscored that with its inherent power to connect, Yoga is good for community, immunity and unity. In his message, President Gotabaya Rajapaksa mentioned that Yoga is a precious, beautiful gift from the treasures of spiritual traditions and practices of Indian sages over millenia, which has touched the lives of generations of people all over the world.

3.​High Commissioner called on everyone to embrace Yoga as a 'Way of Life' to improve flexibility and mindfulness and thanked everyone for joining the High Commission for commemorating this day.

4.​Due to Covid-19 -related travel restrictions imposed this year, all events to mark the International Day of Yoga are being held in the virtual mode. In the run up to the IDY, a number of free online Yoga sessions were organized by SVCC, in May-June 2021. These sessions focused on wellness and therapeutic Yoga, in line with the theme for this year’s IDY. On June 20, 2021, a special Yoga session was organized at the Param Dhamma Chetiya Pirivena in Ratmalana, at which a special message from the High Commissioner, in Sinhala language, was shared with the participants.

5. ​Since 2015, every year, the High Commission of India celebrates the International Day of Yoga in Sri Lanka with great fervour, with the participation of the Sri Lankan leadership and public. Average footfall for the event over the years has been in thousands. Despite the challenges posed by the pandemic, close to around 7000 participants attended various online events that were organized this year for the 7th International Day of Yoga.

***

Colombo

21 June 2021

ඉන්දියානු මහ කොමසාරිස් කාර්යාලය

කොළඹ

***

පුවත්පත් නිවේදනය

හත් වන ජාත්‍යන්තර යෝගා දිනය

ඉන්දියානු මහ කොමසාරිස් කාර්යාලය සහ කොළඹ ස්වාමි විවේකානන්ද සංස්කෘතික මධ්‍යස්ථානය අද දින (ජූනි 21) ශ්‍රී ලංකා ආරක්ෂක හමුදාවන් හා එක්ව විශේෂ අතත්‍ය යෝගා වැඩසටහනක් සමඟින් 7 වන ජාත්‍යන්තර යෝගා දිනය සැමරුවේය. මෙහි ප්‍රධාන ආරාධිත අමුත්තා ලෙස ශ්‍රී ලංකා ආරක්ෂක ලේකම් ජෙනරාල් (විශ්‍රාමික) කමල් ගුණරත්න මහතා සහභාගී වූ අතර ආරක්ෂක මාණ්ඩලික ප්‍රධානී සහ යුධ හමුදාපති ජෙනරාල් ශවේන්ද්‍ර සිල්වා මැතිතුමා සහ කොතලාවල ආරක්ෂක විශ්ව විද්‍යාලය, පුහුණු පාසල් සහ ආරක්ෂක අංශයේ අධ්‍යාපන ආයතන, නෞකා වැනි ශ්‍රී ලංකාව පුරා ආරක්ෂක අංශවලට අදාළ විවිධ ආයතන 150ක පමණ සාමාජිකයන් 500ක් පමණ දෙනා මේ සඳහා සහභාගී වූහ.

2. ​වැඩසටහන සමාරම්භ කරමින් රත්මලාන පරම ධම්ම චේතිය පිරිවෙනෙහි විහාරාධිපති සහ අධ්‍යක්ෂ අති පූජ්‍ය මාඉටිපේ විමලසාර නාහිමියෝ සැමගේ සුබසිද්ධිය සඳහා ආශිර්වාද කළහ. විවිධ ප්‍රතිලාභ රැසක් ලබා දෙන යෝගා ව්‍යායාමයන්හි නිරත වීමට සැම දෙනා දිරිගන්වමින් ඉන්දීය අග්‍රාමාත්‍ය නරේන්ද්‍ර මෝදි මැතිතුමාගේ සහ ශ්‍රී ලංකා ජනාධිපති ගරු ගෝඨාභය රාජපක්ෂ මැතිතුමාගේ යෝගා දින පණිවුඩ මෙහිදී ඉදිරිපත් කරන ලදී. අග්‍රාමාත්‍ය නරේන්ද්‍ර මෝදි මැතිතුමා සිය යෝගා දින පණිවුඩයේදී මෙවර යෝගා දිනයේ තේමාව වන 'සුවසෙත සඳහා යෝගා' යන්න වර්තමාන කොවිඩ්-19 තත්ත්වයට අදාළ වන ආකාරය පිළිබඳව සඳහන් කළේය. ඒකාත්මික වීමට නිසඟ බලයක් ඇති යෝගා ප්‍රජාවට ද, ප්‍රතිශක්තියට ද එකමුතුබවට ද යහපත් බව එතුමා අවධාරණය කළේය. යෝගා යනු වසර දහස් ගණනක් පැරණි ආධ්‍යාත්මික සම්ප්‍රදායන්හි සහ ඉන්දියානු දාර්ශනිකයන්ගේ ක්‍රමවේදයන්හි සුන්දර, වටිනා ත්‍යාගයක් බව ද එය ලොව පුරා පරම්පරා ගණනාවක ජනතාවගේ ජීවිත ස්පර්ශ කර ඇති බව ද ගෝඨාභය රාජපක්ෂ මැතිතුමා සිය යෝගා දින පණිවුඩයේ සඳහන් කළේය.

3.​ මහ කොමසාරිස්තුමා නම්‍යශීලිත්වය සහ සතිමත්භාවය වැඩි දියුණු කරගැනීම සඳහා යෝගා ජීවන පුරුද්දක් ලෙස පුරුදු පුහුණු කරගන්නා ලෙස සියළු දෙනාගෙන් ඉල්ලා සිටියේය. යෝගා දිනය සැමරීම සඳහා මහ කොමසාරිස් කාර්යාලය සමඟින් එක්වීම සම්බන්ධයෙන් එතුමා සියළු දෙනාට සිය ස්තූතිය පුද කළේය.

4.​ පවතින කොවිඩ්-19 සංචාරක සීමා හේතුවෙන් මෙවර සියළු ජාත්‍යන්තර යෝගා දින වැඩසටහන් අතත්‍ය අයුරින් පැවැත්වේ. යෝගා දිනය නිමිත්තෙන් 2021 මැයි-ජූනි මාසයන් හිදි ස්වාමි විවේකානන්ද සංස්කෘතික මධ්‍යස්ථානය විසින් මාර්ගගත (ඔන්ලයින්) යෝගා සැසි රැසක් නොමිලේ පවත්වන ලදී. මෙවර තේමාව අනුව මෙම සැසි සුවතාවය සහ චිකිත්සක යෝගා සම්බන්ධයෙන් විශේෂ අවධානයක් යොමු කරමින් සංවිධානය කර තිබිණ. 2021 ජූනි 20 වන දින රත්මලාන පරම ධම්ම චේතිය පිරිවෙනේදී විශේෂ යෝගා වැඩසටහනක් පැවති අතර එම අවස්ථාව සඳහා මහ කොමසාරිස්තුමා සිංහල භාෂාවෙන් විශේෂ පණිවුඩයක් ඉදිරිපත් කළේය.

5. ​ඉන්දියානු මහ කොමසාරිස් කාර්යාලය 2015 වසරේ සිට සෑම වසරකම ජාත්‍යන්තර යෝගා දිනය මහත් උනන්දුවකින් ශ්‍රී ලංකා නායකත්වය සහ ජනතාව සමඟ එක්ව සමරයි. සාමාන්‍යයෙන් සෑම වසරකම ඒ සඳහා දහස් ගණනක් ජනතාව සහභාගි වෙති. වසංගතය විසින් මතුකර ඇති අභියෝග හමුවේ පවා මෙවර හත් වන ජාත්‍යන්තර යෝගා දිනය නිමිත්තෙන් සංවිධානය කරන ලද විවිධ මාර්ගගත (ඔන්ලයින්) වැඩසටහන් සඳහා 7000කට ආසන්න පිරිසක් සහභාගී වූහ.

***

කොළඹ

2021 ජූනි 21

இந்திய உயர் ஸ்தானிகராலயம்

கொழும்பு

***************

ஊடக அறிக்கை

ஏழாவது சர்வதேச யோகா தினம்

இந்திய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் கொழும்பிலுள்ள சுவாமி விவேகானந்தா கலாசார நிலையம் ஆகியவை இலங்கை பாதுகாப்பு படையினருடன் இணைந்து ஏழாவது சர்வதேச யோகா தினத்தை கொண்டாடும் முகமாக இன்றைய தினம் (ஜூன் 21) மெய்நிகர் மார்க்கம் ஊடாக விசேட யோகா அமர்வு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தன. இலங்கை பாதுகாப்புச் செயலர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) கமல் குணரட்ன அவர்கள் இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டிருந்த அதேசமயம் பாதுகாப்பு படைகளின் பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களும், இலங்கையிலுள்ள கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகம், பயிற்சி பாடசாலைகள், பாதுகாப்பு அக்கடமிகள் மற்றும் கப்பல்கள் உள்ளிட்ட கிட்டத்தட்ட 150 பாதுகாப்பு ஸ்தாபனங்களைச் சேர்ந்த பாதுகாப்பு துறைசார் அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

2. இந்நிகழ்வினை ஆரம்பித்து வைக்கும் முகமாக இரத்மலானை பரம தம்ம சைத்திய பிரிவேனாவின் பிரதம குருவும் பணிப்பாளருமான அதி வணக்கத்துக்குரிய டாக்டர் மைதபே விமலசேர தேரர் அவர்கள் அனைவரினதும் நல்வாழ்வுக்காக புத்த பெருமானின் ஆசிகளை வேண்டி வழிபாடுகளை நடத்தியிருந்தார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை ஜனாதிபதி அதிமேதகு கோதாபய ராஜபக்ஷ ஆகியோரது செய்திகள் இந்நிகழ்வில் பங்குபற்றியவர்களுக்கு மத்தியில் பகிரப்பட்டிருந்ததுடன் பல்வேறு நன்மைகளுக்காக சகலரும் யோகாவில் ஈடுபடவேண்டுமென்ற ஊக்குவிப்பை அவர்கள் அச்செய்திமூலம் வழங்கியிருந்தனர். இவ்வருட யோகா தினத்துக்கான தொனிப்பொருளான ஆரோக்கியத்துக்காக யோகா என்பது தற்போதைய கொவிட்19 நிலைமைக்கு மத்தியில் எவ்வாறான தொடர்பினைக் கொண்டுள்ளது என்பதனை பிரதமர் நரேந்திர மோடி தனது செய்தியில் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் சமூகம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஒற்றுமை ஆகியவற்றிற்கு சிறந்ததாக கருதப்படும் யோகா, தொடர்புகளுக்கான உள்ளார்ந்த சக்தியினை கொண்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ தனது செய்தியில், உலகம் முழுவதிலும் இருக்கும் பல்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த மக்களினதும் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்திய யோகா, பல்லாயிரம் ஆண்டுகாலமாக இந்திய முனிவர்கள் மேற்கொண்டிருந்த நடைமுறைகள் மற்றும் ஆன்மீக பாரம்பரியங்களின் பொக்கிஷங்களிலிருந்து கிடைக்கப் பெற்றிருக்கும் மிகவும் பெறுமதியானதும் அழகானதுமான பரிசு எனவும் குறிப்பிட்டுள்ளார்.

3. நெகிழ்ச்சித்தன்மை மற்றும் நினைவாற்றலை மேம்படுத்துவதற்கான வாழ்க்கை வழிகாட்டியாக யோகாவை அனைவரும் தளுவிச்செல்ல வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்த உயர் ஸ்தானிகர், இந்நிகழ்வை கொண்டாடுவதற்காக இணைந்து கொண்டிருந்த அனைவருக்கும் தனது நன்றிகளையும் தெரிவித்திருந்தார்.

4. இவ்வருடம் கொவிட்-19 காரணமாக அமுல்படுத்தப்பட்டிருக்கும் பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக சர்வதேச யோகா தினத்தை குறிக்கும் சகல நிகழ்வுகளும் மெய்நிகர் மார்க்கங்கள் ஊடாக நடத்தப்பட்டிருந்தன. சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு 2021 மே முதல் ஜூன் வரையான காலப்பகுதியில் கொழும்பு, சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தினால் இலவசமாக யோகா அமர்வுகள் நிகழ்நிலையூடு நடத்தப்பட்டிருந்தன. இந் நிகழ்வுகள் அனைத்தும் சர்வதேச யோகா தினத்தின் தொனிப்பொருளுக்கு அமைவாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 2021 ஜூன் 20ஆம் திகதி இரத்மலானை பரம தம்ம சைத்திய பிரிவேனாவில் விசேட யோகா அமர்வு ஒன்று ஒழுங்கமைக்கப்பட்டிருந்ததுடன் இந்த அமர்வில் கலந்து கொண்டிருந்தவர்களுக்கு சிங்கள மொழியில் உயர் ஸ்தானிகரால் வழங்கப்பட்டிருந்த செய்தியும் பகிரப்பட்டது.

5. 2015ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் இந்திய உயர் ஸ்தானிகராலயம் மிகுந்த உற்சாகத்துடன் இலங்கையில் சர்வதேச யோகா தினத்தை கொண்டாடி வருகின்றது. இந்த நிகழ்வுகளில் இலங்கையின் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட சகல தரப்பினரும் பங்குபற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். கடந்த காலங்களில் நடைபெற்றிருந்த சர்வதேச யோகா தின நிகழ்வுகளில் பல்லாயிரக்கணக்கானோர் பங்குபற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். பெருநோயினால் மேலெழுந்திருக்கும் சவால்களுக்கு மத்தியில் இவ்வருடம் ஏழாவது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்நிலை அமர்வுகள் பலவற்றில் கிட்டத்தட்ட 7 ஆயிரத்துக்கும் அதிகமானொர் கலந்துகொண்டிருந்தனர்.

*************************

கொழும்பு

21 ஜூன் 2021

Country